search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "இந்திய மாணவர்கள் கைது"

    விசா மோசடியில் கைதான இந்திய மாணவர்களுக்கு ஆதரவாக அமெரிக்க எம்.பி.க்கள் குரல் கொடுத்துள்ளனர். #IndianStudentsdetention #Indiaissuesdemarcheto #demarchetoUSEmbassy
    வாஷிங்டன்:

    அமெரிக்காவில் போலி பல்கலைக்கழகத்தில் பதிவு செய்து கொண்டு தங்கி இருந்ததாக இந்திய மாணவர்கள் 129 பேர் மீது விசா மோசடி புகார் எழுந்துள்ளது. அவர்கள் அமெரிக்க போலீசாரால் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்களை விடுவிப்பது தொடர்பாக இந்திய அரசு நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளது.

    இந்த நிலையில், அவர்களுக்கு ஆதரவாக அமெரிக்க எம்.பி.க்கள் குரல் கொடுத்துள்ளனர். இந்திய மாணவர்கள் சரியாக நடத்தப்படுவதுடன், தூதரக தொடர்பினைப் பெற அனுமதிக்க வேண்டும் என்று பிரபல இந்திய வம்சாவளி அமெரிக்க எம்.பி. ராஜா கிருஷ்ணமூர்த்தி தலைமையிலான எம்.பி.க்கள் உள்நாட்டு பாதுகாப்பு அமைச்சகத்துக்கு கடிதம் எழுதி உள்ளனர்.

    இந்த கடிதத்தில் தாமஸ் சூஸ்ஸி, ராப் உட்டால், பிரெண்டா லாரன்ஸ் உள்ளிட்ட எம்.பி.க்கள் கையெழுத்திட்டுள்ளனர்.

    இதற்கிடையே 129 மாணவர்களில் 117 பேர் தூதரக தொடர்புக்குள் கொண்டு வரப்பட்டுள்ளனர் என இந்திய அரசு கூறி இருப்பது குறிப்பிடத்தக்கது.
    அமெரிக்காவில் விசா முறைகேட்டில் இந்திய மாணவர்கள் 129 பேர் கைது செய்யப்பட்டுள்ள விவகாரத்தில், போலி பல்கலைக்கழகம் என தெரியாமல் அவர்கள் சேர்ந்துவிட்டதாக மாணவர்கள் தரப்பு வக்கீல்கள் வாதாடினர். #IndianStudentsdetention #Indiaissuesdemarcheto #demarchetoUSEmbassy
    வாஷிங்டன்:

    அமெரிக்காவில் வெளிநாட்டு மாணவர்கள் கல்வி பயில்வதற்கு ‘எப் 1’ விசா வழங்கப்படுகிறது. இப்படி ‘எப் 1’ விசா பெறும் மாணவர்கள், படிப்பு முடிந்ததும் அமெரிக்காவிலேயே பணிபுரிவதற்காக பணி விசாவுக்காக காத்திருப்பது உண்டு.

    அந்த வகையில் மிச்சிகன் மாகாணத்தில் உள்ள பார்மிங்டன் பல்கலைக்கழகத்தில் பல மாணவர்கள் பதிவு செய்துகொண்டுள்ளனர்.

    ஆனால் இந்த பார்மிங்டன் பல்கலைக்கழகம், விசா மோசடிகளையும், குடியேற்ற விதி மீறல்களையும் கண்டறிவதற்காக உள்நாட்டு பாதுகாப்புத்துறையால் போலியாக ஏற்படுத்தப்பட்டுள்ளது.

    இந்த ரகசிய நடவடிக்கை குறித்து அறியாமல், இந்தியர்கள் 8 பேர், வெளிநாட்டு மாணவர்கள் 600 பேரை அமெரிக்காவிலேயே தங்கவைப்பதற்காக பார்மிங்டன் பல்கலைக்கழகத்தை அணுகினர்.

    இதையடுத்து, அவர்கள் விசா முறைகேட்டில் ஈடுபட்டதாக 8 பேரும் கடந்த வாரம் கைது செய்யப்பட்டனர்.

    மேலும் இந்த பல்கலைக்கழகத்தில் படிப்பதற்காக விண்ணப்பித்த 130 மாணவர்களையும் கைது செய்தனர். அவர்களில் ஒருவர் மட்டும் பாலஸ்தீனத்தை சேர்ந்தவர்.

    மற்ற 129 பேரும் இந்தியர்கள் ஆவார்கள். அமெரிக்காவின் இந்த நடவடிக்கைக்கு கடும் கண்டனம் தெரிவித்த இந்திய வெளியுறவு அமைச்சகம் இந்திய மாணவர்கள் 129 பேரையும் உடனடியாக விடுவிக்கும்படி கோரிக்கை விடுவித்தனர்.

    இந்த நிலையில், விசா முறைகேட்டில் ஈடுபட்டதாக கைது செய்யப்பட்ட 8 பேர் மிச்சிகன் மாகாணத்தில் உள்ள கிழக்கு மாவட்ட கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டனர். அப்போது அவர்கள் தங்கள் குற்றவாளிகள் இல்லை என வாதாடினர்.

    இதற்கிடையே இந்த விசா முறைகேடு தொடர்பாக கைது செய்யப்பட்ட 129 இந்திய மாணவர்களும், தெரிந்தே தவறு செய்ததாக அமெரிக்க குடியேற்ற அதிகாரிகள் தெரிவித்தனர்.

    இதுகுறித்து அவர்கள் கூறுகையில், “வகுப்புகள் ஏதும் நடைபெறாது, வகுப்புகளில் தாங்கள் கலந்துகொள்ளப்போவதில்லை எனத் தெரிந்தே இவர்கள், பல்கலைக்கழகத்தில் பதிவு செய்துகொண்டு கட்டணம் செலுத்தினர். தவறான முறையில் மாணவர் என்ற அந்தஸ்தில் அமெரிக்காவில் தங்கியிருப்பதற்காக போலி பல்கலைக்கழகத்தில் பதிவு செய்துகொண்டுள்ளனர்” என தெரிவித்தனர்.

    ஆனால், மாணவர்கள் தரப்பில் வாதாடும் வக்கீல்களோ, போலி பல்கலைக்கழகம் என தெரியாமல் மாணவர்கள் சேர்ந்துவிட்டதாகவும், தவறுகளை கண்டறிவது என்ற பெயரில் அதிகாரிகள் மோசமான ஒரு முறையை பின்பற்றியிருப்பதாகவும் கூறுகின்றனர்.  
    ×